கல்குவாரி இடிந்து விபத்தில் மூவர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல்குவாரி இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில்,  ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மர்குண்டி பகுதியில் உள்ள கல்குவாரி சுரங்கம் கடந்த சனிக்கிழமை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 9க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அசம்பாவிதத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், உடல்களை மீட்கும் பணியில் அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மீட்பு பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Night
Day