மீன்வளத்துறை எச்சரிக்கை - 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - வாழ்வாதாரம் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லததால் 10 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை மற்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி, தருவை குளம், மணப்பாடு, அமலி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடந்த 4 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லததால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.  

Night
Day