ரூ.50 கோடி ஜிஎஸ்டி மோசடி - ஒருவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் போலி வணிக நிறுவனங்கள் மூலம் 50 கோடிக்கும் மேல் நிகழ்ந்த ஜிஎஸ்டி மோசடியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

போலி வணிக நிறுவனங்கள் மூலம் ஜிஎஸ்டி மோசடி நடந்திருப்பதாக ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, சென்னையில் முதற்கட்டமாக 12 நிறுவனங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், 50 கோடி ரூபாய்க்கும் மேல் போலி உள்ளீட்டு வரி கடன் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த மோசடியை அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்ததாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர், மோசடிக்கு முக்கிய காரணமாக செயல்பட்டவரும், பதிவு செய்யப்படாத வரி ஆலோசனை நிறுவனத்தை நடத்திய வருமான ஜுனைத் அகமது என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதானவரிடமிருந்து 196 சிம் கார்டுகள், 42 காசோலை புத்தகங்கள், 41 போன்கள், ரப்பர் ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர்.

Night
Day