மழை நீரில் நடந்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி நால்வர் நகர் பகுதியில் மழை நீரில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 66 மில்லி மீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் நால்வர் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின் வயரில் கசிவு ஏற்பட்டு அப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது பழனியாண்டி என்ற முதியவர் அவ்வழியாக நடந்து சென்றபோது, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

varient
Night
Day