ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற மாணாக்கர்கள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடைபெற்ற உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 8 மாணவ, மாணவிகளும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதற்கு தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென்காசியில் அம்மா வழியில் மக்கள் பயணம் மேற்கொண்ட போது குத்துக்கல்வலசை பகுதியில் சிலம்பம் சுற்றி சிறப்பான வரவேற்பு அளித்த சிறுவன் பவின் குமார், இன்றைக்கு ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய அளவில் தங்கப்பதக்கமும், உலக அளவில் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும், அன்று அச்சிறுவனை நேரில் அழைத்து வாழ்த்து கூறி ஆசிர்வதித்ததை இந்நேரத்தில் எண்ணி மிகவும் பெருமிதம் அடைவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

உலகளவில் பதக்கங்களை வென்று சாதனைப்படைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அனைவரும் தொடர்ந்து மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று நம் பிறந்த மண்ணிற்கும், நாட்டிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day