ஸ்மிருதி மந்தனாவின் வருங்கால கணவரும் மருத்துவமனையில் அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை தொடர்ந்து, அவருடைய வருங்கால கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நீண்ட காலமாக காதலித்து வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுவந்த நிலையில். மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலாஷ் முச்சலும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மந்தனாவை விட அவருடைய தந்தையுடன் பலாஷ் மிகவும் நெருக்கமும் அன்பும் கொண்டிருந்தார் என்றும்  பலாஷ் முச்சலின் தாயார் அமிதா முச்சல் கூறியுள்ளார். 

Night
Day