டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தாத அரசுக்கு எதிராக இந்தியா கேட் பகுதியில் ஒரு குழுவினர் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் காற்று மாசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது மாவோயிஸ்ட் தளபதி மாத்வி ஹிட்மாவின் புகைப்படத்துடன் கூடிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இதனால் அங்கு சுவாச பிரச்சினை உள்ளவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க தவறிய மாநில அரசை கண்டித்து ஒரு குழுவினர் இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் சமீபத்தில் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தளபதியான மாத்வி ஹிட்மாவின் புகைப்படத்துடன் கூடிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, அரசுக்கு எதிராகவும், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர். 

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பெப்பர் ஸ்பிரே கொண்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், அங்கிருந்து வலுக்கட்டாயமாக கைது செய்து வெளியேற்றியதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 


Night
Day