SIR பணிகளில் முறைகேடு - தட்டிக்கேட்டவருக்கு திமுகவினர் மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை சிங்காநல்லூர் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில், திமுக பிரமுகர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கோவையில் முன்னாள் திமுக அமைச்சரான செந்தில் பாலாஜியின் ஆதரவுடன், வாக்குச்சாவடி அலுவலர்களாக திமுக நிர்வாகிகளும், அவர்களது குடும்பத்தினரும் களமிறக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, நஞ்சுண்டாபுரம் பகுதியில் திமுக பிரமுகரின் மனைவி பேபி என்பவர், வாக்குச்சாவடி அலுவலராக இருந்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த முகாமில், திமுகவை சேர்ந்தவர்கள் போலி வாக்காளர்களை சேர்த்தும், உண்மையான வாக்காளர்களை நீக்கும் வகையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

அப்போது முறைகேடுகளை தடுக்க முயன்ற நபருடன், 62-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ரேவதியின் கணவரான முரளி என்பவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

Night
Day