2வது டெஸ்டில் இந்தியா படுதோல்வி - தொடரை முழுமையாக வென்று தென்னாப்பிரிக்கா சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென்னாப்ரிக்கா அணி, தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

கவுகாத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்ரிக்கா அணி 489 ரன்களும், இந்திய அணி 201 ரன்களும் எடுத்தது. 288 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்ரிக்கா அணி, 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தது. 549 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரை முழுமையாக கைப்பற்றிய தென்னாப்ரிக்கா அணி, இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

varient
Night
Day