புரட்சித்தாய் சின்னம்மா ஊக்கப்படுத்தியதால் தான் சாதனை படைக்க முடிந்தது - சிறுவன் பவின்குமார் பெருமிதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின்குமார் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அளித்த ஊக்கத்தின் காரணமாகவே பதக்கம் வெல்ல முடிந்ததாக சிறுவன் பவின்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்ற உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் 12 நாடுகள் பங்கேற்ற நிலையில், தமிழகத்தில் இருந்து 21 பேர் கலந்து கொண்டனர். அதில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் பங்கேற்று 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என அனைவரும் பதக்கங்களை வென்று அசத்தினர். குறிப்பாக குத்துக்கல்வலசை பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரத்தின் பேரனும், மாடசாமி என்ற செல்வம் - ராமலெட்சுமி தம்பதியினரின் மகனுமான சிறுவன் பவின் குமார் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த சாதனை மாணாக்கர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தன்னை ஊக்கப்படுத்தியதால் தான் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைக்க முடிந்ததாக பெருமிதத்துடன் கூறியுள்ள சிறுவன் பவின் குமார், தங்களது குடும்பத்தின் சார்பாக புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

Night
Day