புதிய எலக்ட்ரிக் வாகனம் பழுது - கேள்வி கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் - கடை உரிமையாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை போரூர் அருகே எலக்ட்ரிக் வாகனம் பழுதாகியது தொடர்பாக கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை கடுமையாக தாக்கிய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். 

போரூரை சேர்ந்த அருண் - செல்வி தம்பதியர் காரம்பாக்கம் அருகே உள்ள எலக்ட்ரிக் வாகன கடையில் கடந்த ஆண்டு இருசக்கர வாகனம் வாங்கியுள்ளனர். புதிய இருச்சக்கர வாகனம் பழுதானதால் வாங்கிய கடையில் பழுதுபார்க்க கொடுத்த போது பேட்டரி பழுதாகியுள்ளதாகவும் அதனை மாற்ற முடியாது என்றும் கடை உரிமையாளர் கணேஷ் தெரிவித்துள்ளார். மேலும், பேட்டரிக்கு 3 ஆண்டுகள் வாரண்டி இருப்பதாக கேள்வி எழுப்பிய அருணை, கடையின் உரிமையாளர் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து வாடிக்கையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கணேஷை கைது செய்த போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day