பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பெற்றோர்கள் முற்றுகை

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் அருகே பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

விழுப்புரத்தில் இயங்கி வரும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும் 3 மாணவிகள் இடைநிலை ஆசிரியர் பால் வின்சென்ட் தங்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். தலைமையாசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தினர். தகவல் பரவியதும் பள்ளி முன் குவிந்த மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

Night
Day