தமிழ்நாட்டிற்கு 22-ஆம் தேதி ரெட் அலர்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 22ம் தேதி தமிழ்நாட்டிற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அரபிக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

வரும் 22ம் தேதி தமிழகத்தில் 21 சென்டி மீட்டருக்கும் அதிகமாக அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 23ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், 24ம் தேதி கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

Night
Day