சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதனால், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ள வானிலை மையம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 

கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை மையம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. 

வரும் 22ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோடை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் 23ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

வரும் 24ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 

Night
Day