பாஜக கூட்டணிக்கு அமமுக ஆதரவு : டிடிவி தினகரன் அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கூட்டணி அமைத்துள்ளதாக அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். 

திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், 3 வது முறையாக, நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்பார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Night
Day