ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார் லதா ரஜினிகாந்த்

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்களிடம் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் அன்பு கட்டளையிட்டு அறிவுறுத்தினார். 

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது 75 வயதிலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும், 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாகவும் திகழ்கிறார். இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்பு இரவு 12 அளவில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள், ரஜினிகாந்த் புகைப்படம் பதித்த பிறந்தநாள் கேக்கை வெட்டி, விமர்சையாக கொண்டாடினர்.

இதனை அறிந்த லதா ரஜினிகாந்த செய்தியாளரை சந்தித்தார். அப்போது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்த அவர், ரசிகர்கள் வெறும் ரசிகர்களாக மட்டும் இல்லாமல் தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக உள்ளதாக கூறினார். ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் வீடு செல்ல வேண்டுமென லதா ரஜினிகாந்த் அன்பு கட்டளையிட்டு அறிவுறுத்தினார்.

Night
Day