தனது நடிப்பாற்றலால் பல தலைமுறைகளை கவர்ந்தவர் ரஜினிகாந்த் - பிரதமர் மோடி புகழாரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நடிகர் ரஜினியின் நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக்  கவர்ந்துள்ளதாகவும், பரவலான பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, திரைப்பட உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின்  குறிப்பிடத்தக்க அம்சமாகும் என குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினி நீண்டகாலம், ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Night
Day