வாணியாறு அணை திறப்பு - கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் மற்றும் ஏற்காடு மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அணையின் பாதுகாப்பு கருதி, கதவணை வழியாக வாணியாற்றில் வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்காடு மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து நிலையில், அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வாணியாறு செல்லும் வெங்கடசமுத்திரம், மோளையானூர், மெணசி உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடைகளை ஆற்றில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் வாணியாறு அணை நிரம்பி, கதவணை வழியாக உபரிநீர் வெளியேறும் ரம்மியமான கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது.

Night
Day