போச்சம்பள்ளி அருகே பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையத்தால் குழந்தைகள் அச்சம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பழுதடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். 
புளியம்பட்டி ஊராட்சியில் உள்ள மயிலம்பட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு பயிலும் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் அச்சத்துடன் அங்கன்வாடிக்கு சென்று வருகின்றனர். இதனால் பெற்றோர் அளித்த கோரிக்கையின் பேரில் அருகிலேயே அங்கன்வாடி மையம் புதியதாக கட்டப்பட்டது கட்டப்பட்டு 3  மாதம் ஆகியும் தற்போது வரை புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் பழைய கட்டிடத்தில் பாதுகாப்பின்றி குழந்தைகள் வகுப்பு வரும் நிலையில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day