உறைய வைக்கும் பனிப்பொழிவு... காஷ்மீரைப் போல் மாறிய உதகை...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் உறை பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உதகை நகர், தலைகுந்தா, காந்தல், கேத்தி, அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் உறை பனி பொழிவு நிலவி வருகிறது. இதில், பசும் புல்வெளிகளில் வெண்போர்வை போர்த்தியது போல் அரை அங்குலத்திற்கு உறை பனிப்பொழிவு படர்ந்துள்ளதால் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால், மக்கள் பனியன், தொப்பி ஜெர்கின் போன்ற வெண்மை ஆடைகளை உடுத்தி குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்கின்றனர். பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் நெருப்பை மூட்டி குளிரை சமாளித்து வருகின்றனர். 

சுற்றுலா பயணிகள் பலர் வாகனத்தில் விழுந்த பனி துகள்களை கையில் எடுத்து விளையாடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். குறைந்தபட்ச வெப்பநிலையாக தலைக்குந்தா பகுதியில் o டிகிரி செல்சியஸும், உதகை நகர் பகுதியில் 2.1 டிகிரியில் குளிர் நிலவி வருகிறது. வரும் நாட்களில் உறை பனி பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Night
Day