திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது 75வது பிறந்தநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்  செய்தார். 

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த ரஜினிகாந்த், இன்று காலை ஏழுமலையான் கோயிலுக்கு சென்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி கும்பிட்டார். மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா மற்றும் பேரன்கள் ஆகியோரும் உடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர், ரஜினிக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த ரஜினிகாந்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சாமி கும்பிடுவதற்காக கோவில் முன்வாசலுக்கு வரிசை வழியாக வந்த ரஜினியை, கோவிலில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்த மற்ற பக்தர்கள் ரஜினிகாந்துக்கு கை கொடுத்து  அவரை வரவேற்றனர். அப்போது ரஜினியை நெருங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்ற அர்ச்சகர் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் அர்ச்சகர் தூக்கினர்.

Night
Day