கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் - ஆளும் கட்சிக்கு கடும் பின்னடைவு

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் ஆளும் இடதுசாரி கூட்டணியை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்க்கட்சியான, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை வகித்து வருகிறது.

கேரளாவில் கடந்த 9ம் தேதி மற்றும் 11ம் தேதி என 2 கட்டங்களாக 6 மாநகராட்சிகள்,  86 நகராட்சிகள் மற்றும் 14 மாவட்ட பஞ்சாயத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தநிலையில், 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. 14 மாவட்டங்களில் 244 மையங்களில்  வாக்குகள் எண்ணும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டபேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படும் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக கூட்டணி இடையே கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் ஆட்சி செய்து வரும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை பின்னுக்கு தள்ளி, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி  தற்போது முன்னிலை வகித்து வருகிறது. 

மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் நான்கில் எதிர்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சி வார்டில் என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 
பாஜக எம்.பி. சுரேஷ் கோபியின் சொந்த தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

Night
Day