100 சதவீதம் நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரி... கடல் போல் காட்சியளிக்கும் பிரம்மாண்டம்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக திகழும் செம்பரம்பாக்கம் ஏரி 100 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளது. 
  
டிட்வா புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் நிரம்பின.  இந்தநிலையில் சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 24 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியாக உள்ளது. இதன் மூலம் ஏரி 100 சதவீதம் நிறைந்துள்ளது. ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 525 கனஅடி வந்து கொண்டிருக்கும் நிலையில், 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

கடந்த 2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் 23.24 அடி நீரைத் தேக்கி வைத்ததே அதிகபட்சமாக இருந்ததாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏரியில் சென்சார் மற்றும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு காண்காணித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

Night
Day