டிச.17ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவா் திரெளபதி  டிசம்பா் 17-ம் தேதி வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீ நாராயணி அம்மன், ஆயிரத்து 800 கிலோ வெள்ளி விநாயகா், சொா்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோயில்களில் தரிசனம் திரௌபதி முர்ம தரிசனம் செய்யவுள்ளார். அதனை தொடர்ந்து, தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தையும் திரௌபதி முர்மு திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டு வைக்கிறாா். வேலூர் நிகழ்ச்சிக்கு பின் குடியரசுத் தலைவர் திருப்பதி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் வேலூர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Night
Day