பேராசிரியர் திரு.R. தாண்டவன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் திரு.R.தாண்டவன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் திரு.R.தாண்டவன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்தார். 

பேராசிரியர் தாண்டவன்,  புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர், அதேபோன்று புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்றவர் என புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார். 

பேராசிரியர் தாண்டவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய ஆசிரியபெருமக்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day