ரஜினியின் 75வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் கோவா சென்றுள்ளதால் வீட்டின் முன்பாக யாரும் திரள வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். இருப்பினும், அவரது வீட்டின் முன்பாக கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100 ஆண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஓவியர் ஹரிஷ் பாபு என்பவர், 10 கிலோ பீன்ஸ் மற்றும் 1 கிலோ கேரட்டால் நடிகர் ரஜினியின் உருவப்படத்தை வரைந்து அசத்தி உள்ளார்.



Night
Day