நடிகர் ரஜினியின் 75வது பிறந்தநாள் - முன்னணி திரைப்பிரபலங்கள் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு பல மொழிகளை சார்ந்த முன்னணி திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 75 வருடங்கள் சிறப்பான வாழ்க்கை, 50 வருடங்கள் சினிமா வாழ்க்கை, பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே என ரஜினிக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

நடிகர் மோகன்லால் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ரஜினிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும், சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த வேளையில், வலிமை மற்றும் அசாதாரண மனப்பான்மையால் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி எனவும் கூறியிருக்கிறார். கடவுள் எப்போதும் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் எல்லையற்ற மகிழ்ச்சியை வழங்கட்டும் என மோகன்லால் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் தனுஷ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், Happy birthday thalaiva என ரஜினிக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

Night
Day