குற்றாலத்தில் குவியும் ஐயப்ப பக்தர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சபரிமலை சீசன் களைகட்டியுள்ளதால் குற்றாலம் அருவிகளில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழைப்பொழிவு குறைந்து குற்றால அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. சபரிமலை செல்வதற்கு முன்பு ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் நீராடி விட்டு பக்தர்கள் சென்று வருவதால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிகரித்துள்ள கூட்டத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Night
Day