தங்கத்தின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 320 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 370 ரூபாய்க்கும், சவரனுக்கு 2 ஆயிரத்து 560 ரூபாய் உயர்ந்து 98 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
 
தங்கத்தில் மாற்றமில்லை என்றபோதிலும் நேற்று உச்சத்தை தொட்ட வெள்ளி விலை இன்று 6 ரூபாய் குறைந்து கிராம் 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

varient
Night
Day