சென்னை: 5 ஆட்டோக்களின் முகப்பு கண்ணாடிகளை நொறுக்கிய மர்மநபர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எம்.கே.பி. நகரில், 5 ஆட்டோ கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில், வியாசர்பாடியைச் சேர்ந்த பேச்சிமுத்து, சரவணன், ஜெய்சங்கர், புஷ்பநாதன், மணிகண்டன் ஆகியோர் தங்கள் ஆட்டோக்களை நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளனர். இதனிடையே, காலை 5 மணி அளவில், ஆட்டோக்களின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், மது போதையில் வந்த மர்ம நபர்கள் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Night
Day