தென்காசி: நுங்கு, பதநீர், இளநீர் உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தில் கொளுத்தும் கோடை வெயில் காரணமாக நுங்கு, பதநீர், இளநீர் உள்ளிட்ட இயற்கை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் கடும் வெப்பத்தின் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அதிலிருந்து விடுபட தண்ணீர் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை நாடி சென்று வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கக்கூடிய நொங்கு, பதநீர், இளநீர் கரும்புச்சாறு உள்ளிட்டவைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

Night
Day