தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
சேலம் கோட்டை மைதானத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறையினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதன்படி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. கோட்டை மைதானத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...