தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
மதுரை மாநகராட்சி பகுதியில் தரமற்ற சிமெண்ட் சாலை அமைத்த நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்கு உட்பட்ட தீக்கதிர் அருகே சிமெண்ட் சாலை சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சிமெண்ட் சாலை முழுவதும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் பெயர்ந்து தூசி பரவி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு சுவாச நோய்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தீக்கதிர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...