லாரி கவிழ்ந்து விபத்து - தானிய வகைகள் சாலையில் கொட்டி வீண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான தானியங்கள் சாலையில் கொட்டி வீணாகியது. விருநகரில் இருந்து கேரளாவிற்கு பருப்பு சிறுபயறு உள்ளிட்ட தானியங்களை ஏற்றி கொண்டு  செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தானிய வகைகள் சாலையில் கொட்டி வீணாகியது. தகவல் அறிந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தினர். தானியங்கள் சாலை முழுவதும் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Night
Day