வங்கக்கடலில் முன்கூட்டியே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24 ஆம் தேதிஉருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவாகவுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும். தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அடுத்த 7 நாட்களுக்கு கனழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Night
Day