கோயில் குளத்தில் மூழ்கி 3 பாடசாலை மாணவர்கள் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூரில் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை உற்சவம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அங்கு பாராயணம் படிப்பதற்காக சென்னை சேலையூரில் இருந்து 4 பேர் வந்துள்ளனர். கோயில் குளத்தில் சந்தியா வதனம் செய்ய ஒரு மாணவன் இறங்கிய போது ஒருவர் மூழ்கியுள்ளார். அப்போது காப்பாற்ற முயன்ற மற்ற 2 மாணவர்களும் மூழ்கினர். இதில் ஹரிஹரன், வெங்கட்ரமணன், வீரராகவன் ஆகிய 3 பேரும் தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டனர்.

Night
Day