இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு கண்டனம் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகையில் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்தை கண்டித்து 4வது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் கடந்த 2-ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்கொள்ளையர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து செருதூர் மீனவர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மீன்பிடி உபகரணங்களை இழந்துள்ள மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை வலியுறுத்தினர். மேலும், இதன் காரணமாக சுமார் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் நாட்டு படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Night
Day