கால்வாய்க்குள் குழந்தை தவறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஆர்கே நகர் பகுதி அருகே சரிவர பராமரிக்கப்படாமல் பாதியளவு மூடப்பட்டப்பட்ட நிலையில் இருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் 3 வயது குழந்தை விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கொருக்குப்பேட்டை சிகரந்தபாளையம் 2வது தெருவில் 3 வயது குழந்தையை அழைத்து கொண்டு சாலையோரமாக தாய் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது குழந்தை முன்னால் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்தது. உடனடியாக தாய் ஓடி சென்று தூக்கியுள்ளார். பராமரிக்கப்படாத கழிவுநீர் கால்வாய் குறித்து கவுன்சிலர்களிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நிரந்தர தீர்வு எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். விளம்பர திமுக அரசின் அலட்சியமே இதுபோன்ற சம்பவத்திற்கு காரணம் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day