சென்னையில் தலைமை ஆசிரியை தாக்கியதில் சிறுமி படுகாயம் - பெற்றோர் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புழுதிவாக்கம் பகுதியில் மை பேனாவில் எழுதியதற்காக சிறுமியை பள்ளி தலைமை ஆசிரியை சரமாரியாக தாக்கியதாக பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் -தனலட்சுமி தம்பதியரின் மூன்றாவது குழந்தை  அப்பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி மை பேனாவில் எழுதியதாக கூறி தலைமை ஆசிரியை, தரையை துடைக்கும் மாப்பில் உள்ள கட்டையால் தலை, கால், கை உள்ளிட்ட இடங்களில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 13ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் மீண்டும் சிறுமியின் உடலில் ஆங்காங்கே வீக்கம் ஏற்பட்டதால் கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில் தலைமறைவாகவுள்ள தலைமை ஆசிரியையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தையின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய தலைமை ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

Night
Day