லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்' - அத்தியாவசியப் பொருட்கள் விலையேற வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பழைய தரச்சான்றை புதுப்பித்தல் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களுக்கு லாரிகள் இயக்கப்படாததால் துறைமுகங்களில் இருந்து பொருட்களை ஏற்றிச் செல்வதிலும், துறைமுகங்களில் பொருட்களை இறக்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடிய நிலை உருவாகி உள்ளது. ஏற்கெனவே தக்காளி, காய்கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது லாரிகளின் வேலை நிறுத்தத்தால் அவை மேலும் உயரக்கூடிய அபாயம் உள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Night
Day