எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரத்தில் தனியார் ஆம்னி பேருந்தில் தாயுடன் பயணம் செய்த 9 வயது சிறுமிக்கு ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 9 வயது மகளுடன் தாய் பயணம் செய்துள்ளார். பேருந்து சேலம் தலைவாசல் அருகே வந்தபோது பேருந்தின் மாற்று ஓட்டுநரான ஞானவேல் என்பவர் தாயுடன் தூங்கி கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியை தனது செல்போனில் ஓட்டுநர் போட்டோ எடுத்துள்ளதாக தெரிகிறது. தூக்கத்தில் இருந்து விழித்து சம்பவத்தை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்த நிலையில் இதுகுறித்து விழுப்புரம் புதிய பேருந்து நிலைய புற காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் ஞானிவேலுவிடம் விசாரித்து வருகின்றனர். ஒடும் பேருந்தில் தாயுடன் சென்ற 9 வயது சிறுமிக்கு பேருந்து ஓட்டுநர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.