நெல்லை சந்திப்பு - ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணி அடித்து கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் மீது வடமாநில இளைஞர் நடத்திய தாக்குதலில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் சாப்பிட்டு கொண்டிருந்த பாண்டிதுரை என்ற  இளைஞர் மீது வட மாநில இளைஞர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கினார். தொடர்ந்து அதே நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்த தங்கப்பன் என்ற முதியவரையும், பிரசாத் என்ற இளைஞரையும் கம்பியால் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடினார். அருகிலிருந்தவர்கள் ரயில்வே போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் தங்கப்பன் என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தாக்குதல் நடத்திய நபர் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞர் பீகாரை சேர்நதவர் என்பதும், வேலைக்காக தமிழகம் அழைத்துவரப்பட்டதும் தெரியவந்தது. மனநிலை சரியில்லாத நிலையில் இருந்த இளைஞரை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்க திட்டமிட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து வேலைக்காக தமிழகம் வரும் வடமாநிலத்தவர்களின் உடல்நலம் குறித்து தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Night
Day