மயிலாடுதுறையில் இளைஞர் படுகொலை : வன்கொடுமை சட்டத்திற்கு மாற்றம் - தாயார் உட்பட 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாற்றம் செய்யப்பட்டு, காதலியின் தாயார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்து. இவரை கடந்த 15 ஆம் தேதி சில நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது தாய் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலையுண்ட வைரமுத்து என்பவர் அதே ஊரில் தனது சமுகத்தை சேர்ந்த பெண்ணை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாக தெரிகிறது. இதனால் அந்த பெண் காதலர் வைரமுத்துவை பதிவு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து வைரமுத்துவை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால் மட்டுமே வைரமுத்துவின் உடலை பெற்றுக் கொள்வோம் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் பெண்ணின் தாய் விஜயா மற்றும் சகோதர்கள் உள்ளிட்ட 4 பேரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்  கைது செய்தனர்.  இதனைத் தொடர்ந்து வைரமுத்துவின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Night
Day