தங்கப் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா நீரஜ் சோப்ரா...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. தகுதி சுற்றில் ஏ மற்றும் பி பிரிவில் மொத்தம் 37 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 84.50 மீட்டர் தூரம் ஈட்டியை எறிபவர்கள் அல்லது அதிக தூரம் ஈட்டியை எறிந்த 12 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. நடப்பு சாம்பியனும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றவருமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதல் வாய்ப்பிலேயே 84.85 மீட்டர் தூரம் எறிந்து ஏ பிரிவில் முதல் நபராக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். ஒட்டு மொத்தமாக சிறந்த 12 பேர் வரிசையில் இடம் பெற்ற மற்றொரு இந்திய வீரரான சச்சின் யாதவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உள்ளிட்டோரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று போட்டி நடைபெறுகிறது. 2023ம் ஆண்டு புடாபெஸ்டில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இந்த முறையும் தங்கப் பதக்கம் வெல்லும் பட்சத்தில், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த 3வது வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைப்பார்.

varient
Night
Day