உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் - தங்கம் வென்ற தமிழக வீரர் ஆனந்த்குமாரை நினைத்து பெருமை - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் ஆனந்தகுமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதற்காக ஆனந்த்குமாரை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். அவரது மன உறுதி,வேகம் மற்றும் உற்சாகம் அவரை ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவருக்கும் அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Night
Day