உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் : தமிழக வீரர் ஆனந்த குமார் தங்கம் வென்று வரலாற்று சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர் ஆனந்த குமார் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். 

சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஸ்பீ்ட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்சிப் போட்டி நடைபெற்றது. இதில் சீனியர் ஆண்கள் பிரிவு ஆயிரம் மீட்டர் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் ஆனந்தகுமார் ஒரு நிமிடம் 24 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். இதன் மூலம் ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.  இந்த போட்டிக்கு  முன்னதாக நடைபெற்ற 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியிலும் வெண்கலம் வென்றார். ஜூனியர் ஆண்கள் பிரிவு ஆயிரம் மீட்டர் போட்டியில் மற்றொரு இந்திய வீரர் கிரிஷ் சர்மா தங்கம் வென்றார்.

Night
Day