ஆந்திராவுக்கு இறால் ஏற்றுமதியில் ரூ.25,000 கோடி இழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க விதித்த 50 சதவீத வரியால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா அரசு மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளது. 

இதுதொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடித்ததில், அமெரிக்கா விதித்துள்ள வரியால் ஆந்திராவின் இறால் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 25,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் இறால் ஏற்றுமதியில் 80 சதவீத பங்களிப்பை அளிக்கும் ஆந்திரா, இறாலை பதப்படுத்தி உள்நாட்டில் விற்பனை செய்ய முயல்வதாகவும் அதற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கடல் உணவு குளிர்பதன கிடங்கு, உள்ளிட்டவற்றை மத்திய அரசு உருவாக்கி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Night
Day