மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை கோரிய வழக்கு : மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு மாநிலங்கள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இச்சட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வினோத் சந்திரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்களை விசாரணை செய்த தலைமை நீதிபதி அமர்வு, மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலங்கள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

Night
Day