எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் ஓய்வூதியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சந்தித்து தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கம் மற்றும் ஓய்வூதியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது தங்களது கோரிக்கைகளை குறித்து புரட்சித்தாய் சின்னம்மாவிடம் எடுத்துக் கூறினர். இந்த சந்திப்பு குறித்து பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் சவிதா ராஜலிங்கம், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியும் இதுநாள் வரை விளம்பர திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைமை நிலைய செயலாளர் ரமணி, ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை அகலவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற விளம்பர திமுக அரசை வலியுறுத்துமாறு புரட்சித்தாய் சின்னம்மாவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.