மழலையர் பள்ளி வளாக சுவிட்ச் பாக்சில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கருவடிக்குப்பம் தனியார் மழலையர் பள்ளியில் மெயின் சுவிட்ச் பாக்சை ஆன் செய்தபோது திடீரென கரும்புகை வெளிவர தொடங்கி தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஊழியர்கள் உடனடியாக பள்ளி வளாகத்தில் இருந்த குழந்தைகளை வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை காட்டுக்குள்ள கொண்டு வந்தனர். தீயணைப்பு துறையினர் நடத்திய விசாரணையில், மெயின் சுவிட்ச் பாக்ஸ் உள்ளே மின்சார வயரை சேதமாகி, மின் கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. 

Night
Day